Posts

மேற்கத்திய நாகரிகம்

மேற்கத்திய நாகரிகம் 1990க்குப் பிறகான முதன்மை நாகரிகங்களாக அன்டிங்டன் குறிப்பவை (மேற்கத்திய நாகரிகம் அடர்நீலத்தில் காட்டப்பட்டுள்ளது). மேற்கத்தியப் பண்பாடுகள் (western culture) அல்லது மேற்கத்திய நாகரிகம் , சுருங்க மேற்கு ஐரோப்பா (மேற்கத்திய கிறித்தவ நாடுகள் மட்டும், கிரீசும் சைப்பிரசும்), அமெரிக்காக்கள், ஆத்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா (சில பகுதிகள்) மற்றும் பிலிப்பீன்சு ஆகிய நாடுகளில் பயிலும் பண்பாடுகளையும் நாகரிகத்தையும் குறிக்கும். மேற்குமயமாக்கம் என்பது ஒரு நாட்டின் பண்பாடு மேற்கத்தியப் பண்பாட்டுக் கூறுகளை தழுவுவதாகும். வரலாற்றாளர் ஆர்னால்டு டோய்ன்பீ மேற்கத்திய பண்பாட்டை வரையறுக்கையில் கிறித்தவ சமயத்தை பெரும்பான்மையாகப் பின்பற்றும் உலகப் பகுதிகள் என்றார்.[1] இந்த வரையறுப்பின்படி தற்கால ஆப்பிரிக்காவின் சில பகுதிகளும் மேற்கத்தியப் பண்பாட்டைச் சேர்ந்தவையாம்; 1950களில் இருந்து பல ஆப்பிரிக்கர்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியுள்ளனர். மேற்கத்தியப் பண்பாட்டின் மொழிகளாக ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கேயம், பிரான்சியம், இடாய்ச்சு, டச்சு, இத்தாலியம், ஆபிரிகான்சு, டகலோக் உ...

தமிழர் பண்பாடு

தமிழர் பண்பாடு Tamil culture தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழ் கலாச்சாரம் கலை மற்றும் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியல் வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் தொழில்நுட்பம். தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும். தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்ட, திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே. "தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புட...

ஐக்கிய அமெரிக்காவின் மொழிகள்

ஐக்கிய அமெரிக்காவின் மொழிகள் ஐக்கிய அமெரிக்காவில் ஆட்சி மொழியாக எதுவும் இல்லை; இருப்பினும், பெரும்பான்மை (~82%) மக்கள் ஆங்கிலம் தமது தாய்மொழியாகப் பேசுகின்றனர்.இங்கு பேசப்படும் மொழிவகை அமெரிக்க ஆங்கிலம் எனப்படுகிறது.96% மக்கள் ஆங்கிலத்தை நல்ல முறையில் அல்லது மிக நல்ல முறையில் பேசக்கூடியவர்கள்.[1] பலமுறை ஆங்கிலத்தை தேசியமொழியாக்க சட்டவரைவுகள் கொணரப்பட்டாலும்[2][3] அவை இன்னும் சட்டமாக்கப்படவில்லை. ஸ்பானிஷ் நாட்டின் இரண்டாவது கூடுதலாகப் பேசப்படும் பொது மொழியாகும்;அது 12% மக்களால் பேசப்படுகிறது[4] ஐக்கிய அமெரிக்காவில் மெக்சிகோ,எசுப்பானியா, அர்ச்சென்டினா மற்றும் கொலம்பியாவிற்கு அடுத்து கூடுதலாகப் பேசும் எசுப்பானியர்கள் உள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் மிகப் பழங்காலத்திலிருந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் ஆங்கிலம் மிக வல்லமையுடன் பேசக்கூடியவர்கள்.[5] 2000 ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஜெர்மன் மொழி பேசுவோர் ஐந்தாம் இடத்தில் உள்ளனர்.[6][7]இத்தாலி, போலீஷ், மற்றும் கிரேக்க மொழிகள் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கு குடிபெயர்ந்த அந்நாட்டு வந்தேறிகளால் பரவலாகப்...

முதல் 20 மொழிகள்

முதல் 20 மொழிகள் தொகு மாண்டரின் (சீனம்) - சீனா - 885 மில்லியன் ஸ்பானிய மொழி - ஸ்பெயின் - 332 மில்லியன் ஆங்கிலம் - ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா - 322 மில்லியன் வங்காள மொழி - இந்தியா, வங்காளதேசம் - 189+ மில்லியன் ஹிந்தி - இந்தியா - 182+ மில்லியன் போர்த்துக்கீச மொழி - போத்துக்கல் - 170+ மில்லியன் ரஷ்ய மொழி - ரஷ்யா - 170+ மில்லியன் ஜப்பானிய மொழி - ஜப்பான் - 128+ மில்லியன் ஜெர்மன் - ஜெர்மனி - 125+ மில்லியன் பிரெஞ்சு - பிரான்ஸ் - 120+ மில்லியன் தமிழ் - இந்தியா, இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா - 78+ மில்லியன் வூ மொழி (சீனம்) - சீனா - 77+ மில்லியன் ஜாவா மொழி - இந்தோனீசியா - 75+ மில்லியன் கொரிய மொழி - தென் கொரியா, வட கொரியா - 75+ மில்லியன் வியட்நாமிய மொழி - வியட்நாம் - 67+ மில்லியன் தெலுங்கு - இந்தியா - 66+ மில்லியன் யூவே மொழி (சீனம்)- சீனா - 66+ மில்லியன் மராட்டி - இந்தியா - 64+ மில்லியன் துருக்கி மொழி - துருக்கி - 59+ மில்லியன் உருது - பாகிஸ்தான், இந்தியா - 58+ மில்லியன்

கணிதம்

கணிதம் கி.மு 3வது நூற்றாண்டின் கிரேக்க கணிதவியலாளர் யூக்ளிடின் (கிடுக்கிமானியை வைத்திருப்பவர்), ஓவியம் - ராபியேல் சான்சியோவின் கற்பனையில், ஏதென்சு கல்விக்கூடத்திலிருந்து.[1] கணிதத்தில் பல்வகை நுட்பம் செறிந்த வடிவங்களைத் துல்லியமாக விளக்கலாம், அலசலாம். இப்படத்தைக் வரைபடமாகத் தரும் சார்பு: cos(y arccos sin|x| + x arcsin cos|y|) கணிதம் (Mathematics) என்பது வணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளைப் பிரதிபடுத்துகின்றன: அளவு (quantity) - எண்கணிதம் [2] அமைப்பு (structure) - இயற்கணிதம்[3] பரவெளி (space) - வடிவவியல் [2] மாற்றம் (change) - பகுவியல் (analysis) - நுண்கணிதம்[4][5][6] பல்வேறு கணிதவியலாளர்களுக்கும் இடையே கணிதத்தின் சரியான வீச்சையும் வரையறையையும் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன.[7][8] கணிதவியலாளர் தோரணங்களைத் தேடுகின்றனர்;[9][10] கண்டுபிடித்த தோரணங்களைப் பயன்படுத்தி ...

ஐந்தாண்டு திட்டம்

இந்திய ஐந்தாண்டு திட்டத்தின் பற்றிய சில தகவல்கள்:- 🌺🌺🌺🌺🌺🌺 🍕 முதல் ஐந்தாண்டு திட்டம்1951 - 1956) ஹரார்டு டோமா மாதிரி திட்டம் ● முன்னுரிமை வேளாண்மை வளர்ச்சி (நீர்மின் திட்டம், நீர்ப்பாசன வசதிகளை பெருக்குதல்) ● திட்டம் வெற்றியடைந்தது சமுதாய முன்னேற்ற திட்டம், குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் 1952ல் தொடங்கப்பட்டது. 🍔 இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1956 - 1961) மஹலனோபிஸ் மாதிரி ● முன்னுரிமை, அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் வளர்ச்சி. ● பிலாய், துர்காபூர், ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. ● பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது 🍣   மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்: (1961 - 1966) ● முன்னுரிமை பெரும் இயந்திரங்களை நம் நாட்டிலேயே உருவாக்குதல். ● வேளாண்மையில் சுய தேவையைப் பூர்த்தி செய்தல். ● பாகிஸ்தான், சீனாவுடன் போர் மற்றும் பருவக்காற்று பொய்த்ததால் வறட்சி காரணமாக தோல்வி அடைந்து. ● தானியங்களை பாதுகாப்போம் என்ற திட்டம் தொடங்கப் பட்டது - 1965. ● பசுமை புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது (1965) 🍲  மூன்று ஓராண்டு திட்டங்கள் (1966 - 69) ● ...

எண் "7" ன் சிறப்புகள்

சிவ ப்ரோதோஷ திருவிழா அன்று அனைவரும் ஆலயம் வருவீர் அருள் பெறுவீர் எண் "7" ன் சிறப்புகள்........ ----- திருவரங்கம் கோவில் ஏழு பிராகாரங்களை உடையது ஏழு முனிவர் : அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன். சப்தகன்னியர் ஏழு பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி,இந்திராணி, சாமுண்டீஸ்வரி பூமியின் கீழ் ஏழு உலகங்களும் மேலே ஏழு உலகங்களும் இருப்பதாக முன்னோர்கள் நம்பினர். 'பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர்' - திருவெம்பாவை 'ஈரேழுலகும் எனக்குறவாக' - கந்தர் சஷ்டி கவசம் ஏழு கீழுலகம் : அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதால(ள)ம் ஏழு மேலுலகம் : பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்,மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம் ஏழு நரகம் : கூடசாலம், இரெளரவம், கும்பிபாகம், பூதி, அள்ளல், செந்து, மகாபூதி ஏழு கடல் : உப்புக்கடல், கறுப்பஞ்சாற்றுக் கடல், மதுக் கடல், நெய்க்கடல், தயிற்க் கடல், பாற் கடல், சுத்த நீர்க் கடல் ஏழு கடல்கள் (சமுத்திரங்கள் அல்ல) கருங்கடல், காஸ்பியன் கடல், பெர்சியன் கடல், செங்கடல், மத்திய த...