எண் "7" ன் சிறப்புகள்
சிவ ப்ரோதோஷ திருவிழா அன்று அனைவரும் ஆலயம் வருவீர் அருள் பெறுவீர்
எண் "7" ன் சிறப்புகள்........
-----
திருவரங்கம் கோவில் ஏழு பிராகாரங்களை உடையது
ஏழு முனிவர் : அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன்.
சப்தகன்னியர் ஏழு
பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி,இந்திராணி, சாமுண்டீஸ்வரி
பூமியின் கீழ் ஏழு உலகங்களும் மேலே ஏழு உலகங்களும் இருப்பதாக முன்னோர்கள் நம்பினர்.
'பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர்' - திருவெம்பாவை
'ஈரேழுலகும் எனக்குறவாக' - கந்தர் சஷ்டி கவசம்
ஏழு கீழுலகம் :
அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதால(ள)ம்
ஏழு மேலுலகம் :
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்,மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்
ஏழு நரகம் : கூடசாலம், இரெளரவம், கும்பிபாகம், பூதி, அள்ளல், செந்து, மகாபூதி
ஏழு கடல் :
உப்புக்கடல், கறுப்பஞ்சாற்றுக் கடல், மதுக் கடல், நெய்க்கடல், தயிற்க் கடல், பாற் கடல், சுத்த நீர்க் கடல்
ஏழு கடல்கள் (சமுத்திரங்கள் அல்ல)
கருங்கடல், காஸ்பியன் கடல், பெர்சியன் கடல், செங்கடல், மத்திய தரைக்கடல், ஏட்ரியாடிக் கடல், அரபிக்கடல்
இந்தியாவின்அதிசயங்கள் ஏழு
1.மதுரை மீனாட்சியம்மன் கோயில்
2.குஜராத்தின் தோலவிரா பகுதி
3.ராஜஸ்தானின் ஜைசல்மார் கோட்டை
4.மத்யபிரதேசத்தின் கஜீரஹோ
5.பீகாரின் நளந்தா பல்கலைக்கழகம்
6.டெல்லியின் செங்கோட்டை
7.புவனேஷ்வரின் சூர்ய கோவில்
நாட்டுக்கு வரும் குற்றங்கள் ஏழு :
விட்டில், தொட்டியர், பன்றி, கள்வர், அவமழை, யானை, கிளி
ஏழு திரைகள் :
கருப்பு - மாயா சக்தி
நீலத்திரை - கிரியா சக்தி
பச்சை - பரா சக்தி
சிவப்பு – இச்சா சக்தி
பொன்வண்ணம் - ஞான சக்தி
வெண்மை - ஆதி சக்தி
கலப்பு – சிற்சக்தி
இசைகள் :
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,விளரி, தாரம்
மேகங்கள் :
சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவத்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம்
ஏழு தாதுக்கள் :
இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலமாகிய விந்து
ஏழு பிறப்பு :
ஐந்து மாதம் வரை – குழவிப் பருவம்.
அவயவங்கள் உற்பத்திக் காலம்.
பிண்டம் வெளிப்பட்ட காலம்.
குழந்தைப் பருவம்.
பாலப் பருவம்.
குமரப் பருவம்.
முதுமைப் பருவம்
Comments
Post a Comment