நுண்ணிலை கற்பித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுண்ணிலை கற்பித்தல் (Micro teaching) என்பது ஆசிரியர் பயிற்சியில் பயன்படும் ஒரு வகை பயிற்று நுட்பமாகும். இது ஆசிரியரின் கற்பிக்கும் திறனை வளர்க்கப் பயன்படுகிறது.

தோற்றம்[தொகு]

1961-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவர் கெய்த் அசெசன் (Keith Acheson) என்பவர்தான், கற்பித்தல் செயல்முறையை, ஒளிப்பதிவு செய்து பின்னூட்டம் வழங்கலாம் என முன்மொழிந்தார். 1963-ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆலன் (Dwight.W.Allen) என்பவர்தான் நுண்ணிலை கற்பித்தல் என்னும் சொற்கோவையை முதன் முதலில் பயன்படுத்தினார்.

பொருள்[தொகு]

ஆசிரியரின் கற்பிக்கும் திறனை (Teaching skill) வளர்த்துக் கொள்ள கட்டமைக்கப்பட்ட கற்பிக்கும் வழிமுறையே நுண்ணிலை கற்பித்தலாகும். இங்கு நுண்ணிலை என்பது அளவு குறைக்கப்பட்டதை குறிக்கிறது. இதில்
  1. ஒரே ஒரு கற்பிக்கும் திறன்
  2. மாணவர்கள் 5 முதல் 10 வரை
  3. வகுப்பு நேரம் 5 முதல் 10 நிமிடங்கள்
  4. ஒரே ஒரு பாடக்கருத்து, என சிறிய அளவில் கற்பித்தல் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு உண்மைச் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மிகச்சிறிய அளவில் இப்பயிற்சியை அமைப்பதால் இது "நுண்ணிலை கற்பித்தல் நுட்பம்" எனப்படுகிறது. இப்பயிற்சியில் சக பயிற்சி ஆசிரியர்களே மாணவர்களாக பாவிக்கப்படும்பொழுது, இது "ஒப்பார் குழு" (Peer group) கற்பித்தல் எனவும் அழைக்கப்படுகிறது.

வரையறை[தொகு]

டுவைட் ஆலன் (Dwight.W.Allen, 1966) கூற்றுப்படி, "நுண்ணிலை கற்பித்தல் என்பது வகுப்பு நேரம் மற்றும் வகுப்பு அளவு குறைக்கப்பட்ட கற்பிக்கும் செயல்பாடு". எம்.சி. நைட் (M.C.Knight, 1971) கருத்துப்படி, "நுண்ணிலை கற்பித்தல் என்பது அளவு குறைக்கப்பட்ட கற்பித்தல், இதில் புதிய திறன்களை வளர்க்கவும், பழைய திறன்களை மெருகேற்றவும் முடியும்". கல்வியியல் தகவல் களஞ்சியம் (Encyclopedia of Education, Ed.Deighton. LC-1971): "நுண்ணிலை கற்பித்தல் என்பது உண்மையான, கட்டமைக்கப்பட்ட, அளவு குறைக்கப்பட்ட கற்பிக்கும் செயல்பாடு; இது ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்ட மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிக்குப் பயன்படுகிறது".

நுண்ணிலை கற்பித்தல் சுழற்சி[தொகு]

இப்பயிற்சியின் சுழற்சியில் 6 படிகள் உள்ளன.
  • திட்டமிடல்: (Planning)
இதில் கற்பிக்கும் திறன் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உட்கூறுகள் அறியப்படுகின்றன. ஒரு பாடக்கருத்தினைக் கொண்டு, திறனை வெளிப்படுத்தும் வகையில் குறு-பாடத்திட்டமாக பாடநிகழ்வு தயாரிக்கப்படுகிறது.
  • கற்பித்தல்: (Teaching)
இதில் பயிற்சி ஆசிரியர் பாடக்கருத்தினை, கற்பிக்கும் திறனை பயன்படுத்தி, 5 முதல் 10 மாணவர்களுக்கு, 5 முதல் 10 நிமிடங்களில் கற்பிக்கிறார். நோக்கர் மூலம், மதிப்பீடுகள் உட்கூறுகளின் அடிப்படையில், ஓர் அட்டவணையில் குறிக்கப்படுகிறது. மேலும் கற்பித்தல் செயல்முறை ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழர் பண்பாடு

எண் "7" ன் சிறப்புகள்